அடுத்த வாரங்களில், இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேறும்: ரணில் உறுதி

Ranil Wickremesinghe Sri Lanka India
By Sivaa Mayuri Jun 22, 2024 05:30 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கை எதிர்வரும் வாரங்களில்  திவால் நிலையில் இருந்து வெளியேறும் எனவும் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இந்தியாவுடன் வலுவான பங்காளித்துவத்தை  இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான அவசரத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில், இருதரப்பு திட்டங்களை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான நிகழ்ச்சி நிரல்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

மூன்று தசாப்தகால மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பிராந்தியத்திற்கு புதிய அபிவிருத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பாக எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

கொழும்பில்(colombo) நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளிகள் சந்திப்பில் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமனரத்ன தேரர் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதியை எதிர்க்க துணியும் சிங்கள மக்கள்

சுமனரத்ன தேரர் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதியை எதிர்க்க துணியும் சிங்கள மக்கள்


இலங்கை பெற்ற கடன்

இந்தியா, இலங்கைக்கு 3.5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியதன் காரணமாகவே, இலங்கை தற்போது இரண்டு கடினமான ஆண்டுகளில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளது.

அவையனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும். பங்களாதேஷ் கொடுத்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை ஏற்கனவே திருப்பிச் செலுத்திவிட்டது என்று ரணில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரங்களில், இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேறும்: ரணில் உறுதி | India Srilanka Ranil Development

தற்போதைய நிலையில், இலங்கை, தமது உத்தியோகபூர்வ கடனாளிகளுடனும், சீனாவின் எக்ஸிம் வங்கியுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட தயாராகி வருகிறது அடுத்த வாரம், புதன்கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன் அடுத்த வாரத்தில், நாங்கள் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்படி, அடுத்த வாரத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ, இலங்கை திவால் நிலையிலிருந்து வெளியே வந்து அடுத்த கட்டத்திற்குள் செல்லும் என்று ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரங்களில், இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேறும்: ரணில் உறுதி | India Srilanka Ranil Development

இதேவேளை, இலங்கை - இந்திய கூட்டுத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியுடன் தாம் விவாதித்துள்ளதாக ரணில் கூறியுள்ளார்.

இந்திய - இலங்கை கூட்டுத்திட்டத்தின் கீழ், எரிபொருள் குழாய் இணைப்பு, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, தரைப்பாதை அமைப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, அமுல் பால் நிறுவனத்தின் திட்டங்கள், எரிவாயு விநியோகம், திருகோணலையில் பொருளாதார மையம், காற்றாலை மின்சாரம் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் உயிரிழப்பு

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் உயிரிழப்பு

இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US