இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி பேச்சுவார்த்தை அவசியம்
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வடமராட்சி ஊடக மையத்தில் நேற்று (04.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர் பிரச்சினை
அவர் மேலும் தெரிவித்தாவது,
“இந்தியாவில் தடைகாலம் ஆரம்பமாகி இருப்பதனால் அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தி இருக்கின்றனர்.
தமிழ் நாட்டில் இறுதியாக நடந்த தேர்தலில் கச்சதீவு பிரச்சினையும் கடற்றொழிலாளர் பிரச்சினையும் பெறும் அரசியலாக பேசப்பட்டு இன்று ஓய்ந்திருக்கின்றது.
இந்நிலையில் இந்தியாவில் தடைக்காலம் முடிந்த பிறகு இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை பூதாகரமாக வெடிப்பதற்கு முன்னர் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் இதற்கான தீர்வினை விரைவில் பெற்றுக்கொடுப்பது அவசியம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |