இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்
இங்கிலாந்து(England) தொல்பொருள் ஆய்வாளர்கள் ரோமானிய காலத்தைச் சேர்ந்த தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அரிய பொருளானது இங்கிலாந்திலுள்ள கார்லிஸ்லே(Carlisle) என்னுமிடத்தில் நடந்துவந்த ஆய்வில், ரோமானிய காலகட்டத்தைச் சேர்ந்த குளியல் அறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபூர்வமான கண்டுபிடிப்பு
பிரித்தானிய நிலவியல் அமைப்புடன் இணைந்து பல்வேறு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பொருள், டைரியன் ஊதா (Tyrian Purple) என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த டைரியன் ஊதா, ரோமானியப் பேரரசின் ஏகாதிபத்திய நீதிமன்றத்துடன் தொடர்புடைய நிறமாகும். இந்த நிறமியானது மத்திய தரைக்கடல், வட ஆப்பிரிக்கா மற்றும் மொராக்கோவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அதை தயாரிப்பது மிகவும் கடினம் என்பதால், அந்த காலகட்டத்தில் இந்த டைரியன் ஊதா, தங்கத்தை விட அதிக மதிப்புடையதாக இருந்துள்ளது.
இது ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பு என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இந்த அரிய நிறமி, எகிப்தின் ரோமானிய மாகாணத்திலுள்ள சுவர் ஓவியங்களிலும், சில உயர் அந்தஸ்து கொண்டோரின் சவப்பெட்டிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
