ஜனாதிபதி தேர்தலில் ரணில் எமது ஒத்துழைப்பை கோரவில்லை: மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கோரவில்லை. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) - மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (04.05.2024) இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலில் வெற்றி பெறுவதே எமது அரசியலின் அடுத்த பிரதான திட்டமாகும். எனவே தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும், திட்டங்களை செயற்படுத்துவோம்.
ஜனாதிபதி வேட்பாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை. எமது வேட்பாளரை கட்டாயம் களமிறக்குவோம்.

அத்துடன் வேட்பாளர் பற்றிய தீர்மானத்தில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாடு இன்னும் இல்லை. அவர் எம்மிடம் ஒத்துழைப்பு கோரவில்லை.” என தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri