தமிழக முதலமைச்சரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸுடன் பேச்சு வார்த்தை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின் படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு்ள்ளார்.
இக் கலந்துரையாடலின் போது, கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கோவிட் அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என்று ஏற்பாடு குழு தீர்மானித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam