பேரிடர் மறுசீரமைப்பை கண்காணிக்க இந்திய –இலங்கை இணைக்குழு
டித்வா பேரிடருக்கு பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகளை கண்காணிக்க, இலங்கை மற்றும் இந்திய அரச அதிகாரிகள் அடங்கிய உத்தியோகபூர்வ குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன
அரசின் ஒரு மூத்த அதிகாரியை கோடிட்டு, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மறுசீரமைப்பு உதவி
இந்த குழு, இந்தியாவின் அமெரிக்க டொலர் 450 மில்லியன் மதிப்பிலான மீட்பு மற்றும் மறுசீரமைப்பு உதவி தொகையின் கீழ், செயல்படுத்த வேண்டிய திட்டங்களைத் தேர்வு செய்யும்.

அத்துடன் இந்திய கடன் வரியின் கீழ் செய்யப்படும் கொள்முதல்களை நிர்ணயிக்கும். திட்டங்களை விரைவுபடுத்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்புவது போன்ற விடயங்களைத் தீர்மானிக்கும்.
இந்த நிலையில், மறுசீரமைப்பு திட்டங்கள், 3,6,9 மாதங்கள் என்ற மூன்று காலக்கட்டங்களில் நிறைவேற்றப்படவுள்ளன.
உடனடி பேரிடர் எதிர்வினை குழு
அதேநேரம்,இந்த திட்டங்கள் சாலைகள் மற்றும் தொடருந்து, சுகாதாரம் கல்வி, வீடமைப்பு, விவசாயம் மற்றும் உடனடி பேரிடர் எதிர்வினை குழு அமைத்தல் என்ற ஐந்து முக்கிய துறைகளில் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வீடமைப்பு, மருத்துவம், கல்வி, தொடருந்து மற்றும் சாலை கட்டுமானம் போன்ற துறைகளின் இந்திய தொழில்நுட்ப குழுவினர் மற்றும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.