இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைப்பு
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களை சில தினங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒரு நாள் போட்டித் தொடரை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது போட்டியை 21 ஆம் திகதிக்கும், இறுதி போட்டியை 24 ஆம் திகதிக்கும் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டி20 போட்டிகள் இம்மாதம் 26, 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவர் மற்றும் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி நிரோஷன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு போட்டித் தொடரை சில நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam