சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இந்திய மதிப்பு பன்மடங்கு உயர்வு: நாசா புகழாரம்
சந்திரயான்- 3 வெற்றிக்கு பிறகு இந்திய விண்வெளி திட்டத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டதாக நாசா விஞ்ஞானி லாரே லெஷின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான மரியாதை சந்திரயான்-3 திட்டத்தின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்: இஸ்ரேலின் எல்லைகளைக் கடந்து விரிவடைய இருக்கின்ற யுத்தம் (Video)
செயற்கைக்கோள் ஏவுதல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சந்திரயான்- 3 வெற்றிக்கு பிறகு இந்திய விண்வெளி திட்டத்தின் மதிப்பு நாசா விஞ்ஞானிகள் மத்தியில் பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
சந்திரயான்-3 மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுக்கான எதிர்காலத் திட்டங்களால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். நாசா மற்றும் இஸ்ரோ இடையே இன்னும் பல ஒத்துழைப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான மரியாதை ஏற்கனவே மிக அதிகமாக இருந்தது. ஏனெனில் இந்தியா நிறைய சாதித்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கி வரும் உலகின் மிக விலையுயர்ந்த செயற்கைக்கோளின் ஏவுதல் 2024ஆம் ஆண்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 47 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
