லண்டனில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வரும் மாடி குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பிய மற்றொருநபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு நடவடிக்கை
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் அதிகளவில் பட்டாசு சத்தம் இருந்ததாகவும், அதனால் தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், " இது ஒரு பயங்கரமான சம்பவம். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்" என தெரிவித்துள்ளார்.

உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 40 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
