ஆசிய கிண்ணப்போட்டியில் இந்தியாவின் சாதனை
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் தமது முதல் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு இராச்சியத்தை தோற்கடித்து சாதனயொன்றை படைத்துள்ளது.
டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலக செம்பியனான இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 13.1 ஓவரில் 57 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
அதிவேகமாக அடைந்த இலக்கு
இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சிவம் துபே 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, துடுப்பாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்புக்கு 60 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதன்படி 20க்கு20 போட்டியொன்றில், இந்திய அணி நேற்று அதிவேகமாக இலக்கை நோக்கி துடுப்பாடிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
முன்னதாக, 2021இல் ஸகொட்லாந்துக்கு எதிராக இந்தியா 6.3 ஓவரில் ஓட்ட இலக்கை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
