ஆசிய கிரிக்கட் கிண்ண தொடர் இன்று ஆரம்பம்
2025 ஆண்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் 17ஆவது பதிப்பு இன்று(09.09.2025) ஆரம்பமாக உள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இருபதுக்கு 20 வடிவத்தில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்தநிலையில், ஆசியக் கிரிக்கெட் சபையின் ஐந்து முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
கலந்துகொள்ளும் அணிகள்
அத்துடன், 2024 ஆசிய கிரிக்கட் சபையின் ஆண்கள் பிரீமியர் கோப்பையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன் மற்றும் ஹொங்காங் ஆகிய அணிகளும் இந்த தொடரில் இடம்பெறுகின்றன.

இதனடிப்படையில், இன்று, ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        