சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சாதனை
தென்னாப்பிரிக்க அணியை 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று இந்த வெற்றி பதிவாகியுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களை பெற்றது எனினும் தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பாடி 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தோல்வி
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் இலங்கை, ஏற்கனவே 317 ஓட்டங்களுக்கு இந்திய அணியிடன் கண்ட படுதோல்வி என்ற தேவையற்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அந்தப்போட்டியில் ஆட்டத்தில் 390 ஓட்டங்களை துரத்திச் சென்ற இலங்கை வெறும் 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
அந்த தோல்வியே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக இருந்து வந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri