வடக்கின் 3 தீவுகளை இலக்கு வைத்து இந்தியாவின் புதிய திட்டம்
வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்பு முறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ஆம் மார்ச் மாதத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நன்றி தெரிவிப்பு
இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்ட உதவிகளுக்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
