இந்தியாவின் ஆடம்பர சந்தை எதிர்கொள்ளும் சவால்: உயர்தர வணிக வளாகங்களின் பற்றாக்குறை
இந்தியாவில் ஆடம்பரப் பொருட்களுக்கான (Luxury Goods) தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வந்தாலும், அந்தப் பொருட்களை விற்பனை செய்வதற்கு போதுமான சர்வதேச தரத்திலான வணிக வளாகங்கள் (Luxury Malls) இல்லாதது ஒரு பெரும் தடையாக உருவெடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton), குச்சி (Gucci) மற்றும் டியோர் (Dior) போன்ற உலகப்புகழ் பெற்ற வர்த்தக நாமங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை விரிவாக்கத் தயாராக உள்ளன.
புதிய ஆடம்பர வணிக வளாகங்களின் கட்டுமானம்
இருப்பினும், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களில்கூட இத்தகைய உயர்தர வர்த்தக நாமங்களுக்குத் தேவையான பிரத்தியேகமான இடவசதி மற்றும் கட்டமைப்பு கொண்ட வணிக வளாகங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

தற்போதுள்ள முன்னணி வணிக வளாகங்களில் இடங்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில், புதிய ஆடம்பர வணிக வளாகங்களின் கட்டுமானம் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. நிலப்பரப்பு பற்றாக்குறை மற்றும் கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்தத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு இடைவெளி
இதனால், சர்வதேச பிராண்டுகள் இந்தியச் சந்தையில் நுழைய விரும்பி காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
இந்த உட்கட்டமைப்பு இடைவெளியைச் சரிசெய்தால் மட்டுமே, இந்தியாவின் வளர்ந்து வரும் ஆடம்பரச் சந்தையின் முழுப்பலனையும் அறுவடை செய்ய முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.