இலங்கையின் மீன்பிடி சட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சர்
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் காரணமாக அரசாங்கம், கடற்றொழிலாளர் தொடர்பான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின்; நிலை குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரச்சினை
இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன - 1996 ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979 ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்குமுறை என்பனவே அவையாகும் அந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன, இதனால் மிகவும் கடுமையான தண்டனைகள், பெரிய அபராதங்கள் மற்றும் அதிக தடுப்புக்காவல் ஆகியவை அந்த நாட்டினால் வழங்கப்படுகின்றன என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து வைப்பது தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கான "மூல காரணம்" 1974 ஆம் ஆண்டு சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது ஆரம்பித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் அதைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் இலங்கை மீன்பிடி அதிகார வரம்பை வரையறுத்ததன் மூலம் கடிதப் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
புவியியல் அருகாமை காரணமாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கடற்றொழிலாளர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இதேவேளை இலங்கை நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த புதுப்பிப்பை வழங்கிய அவர், "நேற்று வரை, இலங்கையில் காவலில் 86 இந்திய கடற்றொழிலாளர்கள் இருந்தனர். இன்று, மேலும் ஒரு இழுவை படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனால், மேலும் 11 கடற்றொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம் 97 இந்திய கடற்றொழிலாளர்கள் தற்போது காவலில் உள்ளனர் - 83 பேர் தண்டனைக்கு உட்பட்டுள்ளனர், பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
