இலங்கைக்கான இந்தியாவின் உதவி தொடரும்..! நளிந்தவிடம் அந்நாட்டு இணை அமைச்சர் உறுதி
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று(19.12.2025) காலை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டுடன் இணைந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டை வலுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை
இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய இராஜதந்திர மற்றும் சுகாதார ஒத்துழைப்பு, அத்துடன் வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாட்டை மேலும் மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இந்தியாவின் அண்டை அண்டை நாடுகளின் பட்டியலின் முதன்மையாக இலங்கை உள்ளது என்று தெரிவித்தார்.
டித்வா சூறாவளிக்குப் பிறகு நாட்டை வலுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது என்றும், எதிர்காலத்தில் உதவிகள் தொடரும் என்றும் அனுப்ரியா படேல் தெரிவித்தார்.
நாட்டைப் பாதித்த பேரிடர்
இந்தியா - இலங்கை உறவுகள் வலுவானவை என்றும், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

நாட்டைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் போது இந்திய அரசு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் பாராட்டினார். மேலும் பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டத்திற்குத் தேவையான ஆதரவையும், நாட்டில் சுகாதார சேவையின் எதிர்காலப் பணிகளை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆதரவையும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய மாநாடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri