இஸ்ரேலிய தந்திரோபாய பாணியில் இந்தியாவின் பதிலடி!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் உள்ள ஒன்பது குடியிருப்பு வீடுகள் இந்தியப் படைகளால் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செயற்பாடானது உள்ளூர் மக்களைத் தண்டிக்கும் இஸ்ரேலிய தந்திரோபாயங்கள் போன்றவை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா - முர்ரான் கிராமத்தில், இந்தியப் படைகளால் கிளர்ச்சியாளர் அஹ்சன் ஷேக்கை தேடும் முயற்சியில் அவரது வீட்டை வெடிக்கச் செய்ததில் 12 வீடுகள் சேதமடைந்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த விசாரணையில் ரஷ்யாவும் சீனாவும் பங்கு வகிக்கக்கூடும் என்றும் கூறுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான நெருக்கடியைத் தணிக்க ஈரானின் முன்மொழிவை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார், சீன வெளியுறவு அமைச்சர் உடனான தொலைபேசி உரையாடலில், இந்தியாவின் "பாகிஸ்தானுக்கு எதிரான அடிப்படையற்ற பிரசாரத்தை" நிராகரிப்பதாகக் கூறியுள்ளார்.
எனினும், காஷ்மீரை அழிக்கும் சதியில் "பயங்கரவாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்" ஈடுபட்டுள்ளனர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான பதட்டங்களுக்கு மத்தியில் "தயார்நிலையை நிரூபிக்க" இந்திய கடற்படை ஒரு பயிற்சியை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
