ஐசிசி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை
பெண்களுக்கான ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்துமாறு ஐசிசி (ICC) முன்வைத்திருந்த கோரிக்கையை இந்திய (India) கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிராகரித்துள்ளது.
பெண்களுக்கான 9ஆவது ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் (Bangladesh) ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக பாதுகாப்பு கருதி போட்டியை வேறு நாட்டில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷின் தற்போதைய நிலை
இந்நிலையில், இந்தியா இதற்கான கோரிக்கையை மறுத்துள்ளமையினால் இந்த விடயம் தொடர்பில் இம்மாதம் 20ஆம் திகதிக்குள் ஐசிசி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெரும்பாலும் இப்போட்டி, இலங்கையில் அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பங்களாதேஷ் ஆண்கள் அணி தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளதுடன் அங்கு 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |