டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பிடித்த இந்தியா
உலக அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல் பட்டியலில் முதலாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
கடந்த நாட்களில் முதலாம் இடத்திலிருந்த அவுஸ்திரேலியா 5 புள்ளிகள் வித்தியாசத்தில் 116 புள்ளிகளுடன் தற்போது இரண்டாம் இடத்தையும் 121 புள்ளிகளுடன் இந்தியா முதலாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதேவேளை இந்த தர வரிசை பட்டியலில் இலங்கை 84 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமான பலப்பரீட்சை
இந்நிலையில் அடுத்தமாதம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் (07.06.2023)ஆம் திகதி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய உலக டெஸ்ட் சம்பியனையும் தெரிவுசெய்யும் போட்டியாகவும் இது மாறவுள்ளது.
அண்மைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிப்பதாக மாறியுள்ளது.
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri