இலங்கை வந்த விமானத்தில் பெருந்தொகை பணத்தை இழந்த துறவி: கொழும்பிற்கு சென்ற அழைப்பு
இலங்கைக்கு வருகை தந்த தாய்லாந்து புத்த மதத்துறவி ஒருவரின் கைப்பையிலிருந்து 10,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பணத்தை திருடிய சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (06) மாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் மற்றும் சுற்றுலா பொலிஸாரால் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க டொலர் மாயம்
78 வயதான துறவி தாய்லாந்தின் பெங்காங்கிலிருந்து நேற்று (06) காலை 11.07 மணிக்கு சிறப்பு விருந்தினர் வருகை வழியாக இலங்கை எயார்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

இதன்பின்னர் அவர் சிகிரியாவுக்குச் சென்ற போது தனது கைப் பையில் இருந்த 10,000 அமெரிக்க டொலர் காணாமல்போனதை அறிந்து கொழும்பில் உள்ள தூதரகத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அமெரிக்க டொலர் பறிமுதல்
அதன்படி, செயல்பட்ட பொலிஸார் விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்து, துறவியைச் சுற்றித்திரிந்த சந்தேகத்திற்கிடமான சீன நாட்டவரை அடையாளம் கண்டு, கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து அமெரிக்க டொலரை பறிமுதல் செய்துள்ளதுடன், சீன நாட்டவர் இன்று (07) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri