இலங்கையின் டிஜிட்டல் அறிமுகத்தை பாராட்டியுள்ள இந்தியா: 6ஜியை நோக்கி செல்வதாக அறிவிப்பு
இலங்கை(Srilanka) அரசாங்கம், அண்மையில் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் முயற்சிகளை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பாராட்டியுள்ளார்.
அனைத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ‘GovPay’ தளம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மாநாடு
இந்தநிலையில், கொழும்பில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாடு ஒன்றின் போது உரையாற்றிய சந்தோஷ் ஜா, இந்த முயற்சிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் டிஜிட்டல் மாற்றத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வேகத்திலும் அளவிலும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இணையற்ற நன்மைகள் கிடைத்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
இந்தியா தனது 1.3 பில்லியன் குடிமக்களுக்கு ஆதார் எனப்படும் டிஜிட்டல் ஐடிகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் 1.2 பில்லியன் கையடக்க தொலைபேசி பயனர்கள், 950 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர்.
உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40% மானவை இந்தியாவிலேயே நடைபெறுகின்றன.
இன்று, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய 5G சந்தையாக உள்ளது, மேலும் இப்போது 6G தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டு வருகிறது என்றும் ஜா கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
