புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தகாத வார்த்தையால் பேசிய அர்ச்சுனா! எழுந்துள்ள கடும் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக, இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்டு வரும் கருத்துக்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்மறையான கருத்துக்களும் எழுகின்றன.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அர்ச்சுனா, தகாத வார்த்தையால் பேசியமை ஏற்றுக்கொள்ள முடியாதது என நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர், யுத்த காலத்திலும் சரி, யுத்தம் முடிவடைந்த காலத்திலும் சரி வெளிநாட்டிலுள்ள உறவுகள் இருப்பதால் தான் நூற்றுக்கு தொன்னூறு வீதமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதை உணராமல் தேவையற்ற வசனங்களை நீங்கள் பாவிக்க வேண்டாம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை பற்றி பேசுங்கள்.
மக்களுக்கு தேவையானவற்றை பற்றி உரையாடுங்கள். நீங்கள் ஒரு சரியான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், காணாமல் போன தமிழ் மக்கள் குறித்து கேள்வி எழுப்புங்கள்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan