இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்
பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் காஸ்மீர் பகுதியில் உள்ள ஹாஜி பீர் கணவாய் என்ற பிரதேசமே தற்போது இந்தியாவினால் குறிவைக்கப்படும் பிரதேசமாக மாறியுள்ளது.
இதனை இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய- பாகிஸ்தான்
தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, தாக்குதல்களை நடத்தி இந்த பிரதேசத்தை கைப்பற்ற முனையும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் நம்புகின்றனர்.
60 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப் பகுதியை கைப்பற்றிய இந்தியா, பின்னர் தாஸ்கண்ட் என்ற ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தானிடமே அந்த இடத்தை மீளக்கையளித்தது.
ஹாஜி பீர் கணவாய். ஜம்மு காஸ்மீரின் பீர் பாஞ்சல் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இது, ஜம்மு பிராந்தியத்தை ஸ்ரீநகரில் இருந்து பிரிக்கக் கூடிய பகுதியாகும். ஒருங்கிணைந்த ஜம்மு காஸ்மீரில் பிரதான வர்த்தக சாலையாகவும் செயற்படுகிறது.
கேந்திர முக்கியத்துவம்
முன்னர் ஜம்மு காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்த போது ஹாஜி பீர் கணவாயும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த கணவாய் பகுதி வழியாகவே, பாகிஸ்தான், தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து வந்ததாக இந்தியா குற்றம் சுமத்தி வந்தது. இதனால் இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் மாறியுள்ளது.
1965-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, இந்திய படையணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீருக்குள் ஊடுருவி ஹாஜி பீர் கணவாயை சூழ்ந்திருந்த மலை சிகரங்களை அடுத்தடுத்து வெற்றிகரமாக கைப்பற்றியது.
ஹாஜி பீர் கணவாயை இந்தியா கைப்பற்றிவிட்டதால் ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஸ்மீரின் இதர நிலப் பகுதியும் எந்த நேரத்திலும் இந்தியா வசமாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டது.

இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
அமைதி ஒப்பந்தம்
அந்த தருணத்தில் சோவியத் ரஸ்யாவின் தலையீட்டில் தாஸ்கண்ட்டில் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றிய ஹாஜி பீர் கணவாய் பகுதி மீண்டும் பாகிஸ்தான் வசமே ஒப்படைக்கப்பட்டது.
குறித்த ஒப்பந்தத்தின் மூலம், இந்த கணவாய் ஒப்படைக்காமல் இருந்திருந்தால், ஜம்மு காஸ்மீரின் விதியும் மாறியிருக்கலாம் என்பதுதான் பாதுகாப்பு தரப்பினரின் கருத்தாக உள்ளது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு காஸ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஸ்மீர் நிலப் பகுதிகளை இந்திய இராணுவம் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாஜி பீர் கணவாய்
அப்படியான ஒரு யுத்த நடவடிக்கையில் இந்தியா ஈடுபடும் போது, இந்தியாவுக்கு, ஹாஜி பீர் கணவாயே முக்கிய இலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இந்த கணவாயை, மீண்டும் இந்தியா கைப்பற்றிவிட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஸ்மீர் நிலப் பகுதிகளுக்கும் இந்தியாவினால் ஆபத்து காத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர் எனினும் இந்த முனைப்புக்களின்போது, பாகிஸ்தானும் பதில் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக பாகிஸ்தானிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
