பாகிஸ்தானை மண்டியிட வைக்க திட்டம்.. மோடியின் கடுமையான பதிலடி!
ஏப்ரல் 22ஆம் திகதி அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையிலேயே, 1960ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இந்தியா இடைநிறுத்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நீர் தொடர்பான போராட்டத்தில், ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பான தகவல்களை இனி பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
பல திட்டங்கள் இரத்து..
பாகிஸ்தான் வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ள நிலையில், இந்தியா ஜம்மு மற்றும் காஷ்மீரில் நீர்சக்தி திட்டங்களை வேகமாகத் ஆரம்பித்து, பாகிஸ்தானுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில், சினாப் (Chenab) நதியில் முன்னெடுக்கப்படும் முக்கிய நீர்சக்தி திட்டங்கள்,1000 மெகாவாட் பாகல் துல் (Pakal Dul), 624 மெகாவாட் கிறு (Kiru) மற்றும் 540 மெகாவாட் க்வார் (Kwar) ஆகிய அனைத்து திட்டங்களையும் 2026 மே முதல் 2028 ஜூலைக்குள் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மேற்குறிப்பிட்ட திட்டங்களில் முதலில் முடிவடைய உள்ள திட்டம் ரத்லே திட்டம் எனவும் இது 2026ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இந்நடவடிக்கை NHPC மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநில மின் வளர்ச்சி கழகம் இணைந்து செயல் படுத்தும் திட்டம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



