ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள்.. திணறும் புடின்!
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இடம்பெற்று வரும் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மீண்டும் புதிய 18ஆவது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 1வீத (68 cents) உயர்ந்து பீப்பாய்க்கு 70.20 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) எண்ணெய் விலை 1.2வீத (81 cents) உயர்ந்து 68.35 டொலராகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் அதில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்ற மத்தியில் பங்குள்ள அனைத்து பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா போர்
நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மூலம் இறக்குமதிகள் தடைசெய்யப்படவில்லை.
ரோஸ்னெஃப்ட் எண்ணெய் நிறுவனத்தின் - இந்தியாவின் மிகப்பாரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான Nayara Energy Ltd நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் G7 நாடுகளுக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு 47.6 டொலராக குறைக்கப்பட்டது.
இந்த புதிய தடைகள் காரணமாக gasoil விலை 15வீதம் உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட மிக உயர்வாகும்.
UBS மற்றும் BNP Paribas உள்ளிட்ட நிபுணர்கள், ரஷ்யாவிலிருந்து நேரடி மற்றும் மறைமுகமாக வரக்கூடிய டீசல் வழங்கல் குறைவது முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர்.
இந்தியா தற்போது ரஷ்யா எண்ணெய் இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது, துருக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. குர்திஸ்தான் எண்ணெய் கப்பல் தொகுப்புகளும் விரைவில் திரும்பும் என கூறப்பட்டாலும், அது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



