விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை
நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடும் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ சுற்றளவில், 300 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் பட்டங்கள் அல்லது எந்தவொரு வான்வழி பொருட்களுக்கு கண்டிப்பாக தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்க விடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.
அச்சுறுத்தலும் இடையூறும்
விமானங்களுக்கும் பயணிகளுக்கும் இவ்வாறான பட்டங்களால் அச்சுறுத்தலும் இடையூறும் ஏற்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
