இலங்கையர்களுக்காக இந்தியா வழங்கும் முழுமை நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்
கொழும்பில்(Colombo) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இந்த உதவித்தொகைகள், மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் மற்றும் சட்டப் படிப்புகள் தவிர்ந்த பட்டப்படிப்புக்களுக்காக, இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுகின்றன.
இலங்கையர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் உதவித்தொகைகள் 2025 - 2026 கல்வி அமர்வுக்கானவை என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
உதவித்தொகைகள்
இந்த உதவித்தொகைகள் வழங்கப்படும் திட்டங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இதன்படி, அ) நேரு நினைவு உதவித்தொகை திட்டம்: இந்தத் திட்டம் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வணிகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளில் இளங்கலை-முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை உள்ளடக்கியது.
ஆ) மௌலானா ஆசாத் உதவித்தொகை திட்டம்: பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப்படிப்புகள்.
இ) ராஜீவ் காந்தி உதவித்தொகை திட்டம்: தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக இளங்கலை படிப்புகள், பொறியியல் இளங்கலை மற்றும் தொழில்நுட்ப இளங்கலை படிப்புகள்;.
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பொதுநலவாய உதவித்தொகை திட்டம்: இந்தத் திட்டம் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வணிகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளில் இளங்கலை- முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளையும் உள்ளடக்கியது.
இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில்
குறித்த திட்டங்கள் ஒவ்வொன்றும் பாடநெறியின் முழு காலத்திற்கும் முழு கல்விக் கட்டணம், மாதாந்த உணவுப் படி மற்றும் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான வருடாந்த மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
அத்துடன் இந்தியாவின் அருகில் உள்ள இடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாக்களுக்கான வருடாந்த மானியம் என்பனவும் வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அந்தந்த வளாகத்திற்குள் விடுதி வசதியும் வழங்கப்படும்.
இந்தநிலையில், இந்திய அரசாங்கம், இந்த உதவித்தொகைகளை வழங்குவதற்காக தகுதியான இலங்கையர்களைத் தேர்ந்தெடுப்பதாக குறிப்பிட்டுள்ள உயர்ஸ்தானிகரகம், வேட்பாளர்களின் தேர்வு இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
தேவையான விபரங்கள் கல்வி அமைச்சின் வலைத்தளமான www.mohe.gov.lk இல்
கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தகுதி
அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறை பற்றி மேலும் அறிய கொழும்பில் உள்ள இந்திய
உயர்ஸ்தானிகரகம் (eduwing.colombo@mea.gov.in

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
