முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ, குறைக்கவோ முடியாது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள குறித்த கட்சிக் காரியாலயத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போலியான வாக்குறுதி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதை போன்று அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ அல்லது கொடுப்பனவு தொகையை குறைக்கவோ முடியாது.
போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அரசியலமைப்பையும் அரசாங்கம் மீறியுள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
