இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் முன்னணி நிறுவனம்
இந்தியாவின் (India) வர்த்தக தலைநகரான மும்பைக்கும் (Mumbai )கொழும்பிற்கும் (Colombo) இடையே நேரடி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
அந்தவகையில், இண்டிகோவின் (Indigo) முதலாவது விமானம் இன்று (12.4.2024) முற்பகல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய நேரடி விமான சேவை
மேலும், மும்பையில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து மும்பைக்கும் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறித்த விமானச் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைப்பின் மூலம், பெங்களூரு (Bangalore), ஹைதராபாத் (Hyderabad) மற்றும் சென்னைக்கு அடுத்தபடியாக, கொழும்பிற்கு நேரடி இணைப்புடன் இந்தியாவின் நான்காவது இடமாக மும்பை மாறியுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஊக்கியாக விளங்கும் மும்பை மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமானங்களை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam