காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
யாழ். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கப்பல் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை மேற்கொள்ளவுள்ளதாகவும் அத்துடன் பயணச்சீட்டின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
பயண நேரம்
கப்பல் சேவை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த கப்பலானது பெப்ரவரி முதலாம் திகதி காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து, நான்கு மணி நேரத்தில் காங்கேசன்துறையை வந்தடையும்.
150 பயணிகள் இந்தப் படகில் பயணிக்க முடியும் என்பதுடன், ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செவ்ல முடியும்.விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை மேற்கொள்ளவுள்ளது.
வாரம் 6 நாட்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணச்சீட்டின் விலை குறைய வாய்ப்பு
ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய் அல்லது 26 ஆயிரம் இலங்கை ரூபாய் கட்டணமாக அறவிடப்படும்.
அரச வரிகளையும் இதர கட்டணங்களையும் குறைப்பதன் மூலம் இந்தப் பயணச்சீட்டின் விலையை மேலும் குறைப்பது குறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 57.50 அமெரிக்க டொலர் அதாவது சுமார் 18,500 ரூபா அளவுக்குக் குறைவுள்ளதாகவும் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
