இந்தியாவில் 'நிதிச்சுமையாக' கருதப்படும் பெண்கள்- சாக்கடையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
இந்திய மும்பையில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து நாட்களேயான பெண் குழந்தை ஒன்று, உள்ளூர் மருத்துவமனையில் குணமடைந்து வருகிறது.
குழந்தை நலமாக உள்ளது. அதன் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீதியில் உள்ள ஒரு இடத்தில் பூனைகள் குழு ஒன்று கூடி சத்தம் எழுப்பியதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் இந்தக் குழந்தையைக் கண்டுபிடித்ததாக போலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் பெண்கள் பெரும்பாலும் சமூக ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறார்கள் மற்றும் பெண்கள் நிதிச் சுமையாகக் கருதப்படுகிறார்கள்,
எனவே பெண் குழந்தைகளை கைவிட்டு செல்வதும் கொலைச் செய்வதும் சாதாரண நிகழ்வுகளாக மாறி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை புறநகர் பகுதியில் இருந்து பெண்கள் தலைமையிலான போலிஸ் குழுவால் இந்தக் குழந்தை மீட்கப்பட்டது.
போலிசார் வந்து பார்த்தபோது, வாய்க்காலுக்குள் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது.
சாக்கடை நீரில் நனைந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. "தாங்கள் குழந்தையை வெளியே தூக்கியபோது, அந்தக்குழந்தை உறைந்து போயிருந்தது.
அவளுடைய கைகள் நீல நிறமாக மாறியிருந்தன என்று பொலிஸாா் கூறினா்
இதேவேளை இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரபிரதேசத்தின் வட மாநிலமான பரேலி நகரில், பிறந்த குழந்தை ஒன்று, மண் பானையில் வைக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு குளிர்காலத்தில், தலைநகர் புதுடில்லியில் பிளாஸ்டிக் பைக்குள் கைவிடப்பட்ட கைக்குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் மாதம், உத்தரபிரதேச மாநிலத்தில் படகு ஓட்டுநர் ஒருவர், கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்த பெண் குழந்தையை மீட்டாா்.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது ஒரு "தேசிய அவமானம்" என்றுக் கூறியதுடன் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற "சிலுவைப் போருக்கும்" அழைப்பு விடுத்தார்.
2014இல் பதவியேற்றவுடன், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் தங்கள் மகள்மாரைக் கொல்வதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
