நிரக்கரி சர்ச்சையடுத்து எரிசக்தி அமைச்சர் -இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இந்திய உயர்ஸ்தானிரகத்தில் நடைபெற்றது. எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும் வளர்ந்து வரும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்பு, ஈடுபாடு தொடர்பிலான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
நிலக்கரியை விநியோகிக்கும் இந்திய நிறுவனம்
தரம் குறைவான நிலக்கரி கொள்வனவினால் நாட்டில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது நிலக்கரியை விநியோகிக்கும் இந்திய நிறுவனமான Trident Chemphar Limited (TCPL) நிறுவனம், முன்னர் அரிசி இறக்குமதி செய்து அப்போது ஏற்பட்ட மோசடிகளால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அவ்வாறு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துக்கே இந்த அரசாங்கம் நிலக்கரி விநியோகத்துக்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.
இந்த மோசடியால் அரசாங்கத்துக்கு 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள் இல்லை என மறுக்கின்றனர்.
ஆனால் தரமற்ற நிலக்கரி தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.