கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை விதித்த நாடு
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இத் தீர்மானத்தினை நேற்று அறிவித்துள்ளனர்.
உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளைச்சலில் வீழ்ச்சி
தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ஏற்கனவே கோரியுள்ள நாடுகளுக்கு மாத்திரம், கோதுமை மாவினை ஏற்றுமதி செய்யவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
10 மில்லியன் டன் கோதுமை மா
இது தற்காலிக தடை மாத்திரமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதிக்கான தடை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 10 மில்லியன் டன் கோதுமை மாவினை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உக்ரைனும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவும் கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
கோதுமை மாவின் விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம் |