இலங்கையுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்தியாவின் திடீர் தீர்மானம்
இலங்கையில் உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்திய அரசாங்கம் திடீர் தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போது இந்திய ரூபாயினை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போது இந்திய ரூபாயினை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி தீர்மானம் எடுத்துள்ளது.
அதிகார பூர்வ நாணய மாற்று தொகை
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த நாடுகளுக்கு இந்தியாவினால் வழங்கப்படும் கடன் தொகைகளும் இந்திய ரூபாயை கொண்டு வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய வலய வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க டொலரை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதனை வரையறுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும், தங்களது முக்கிய வர்த்தக பங்காளிகளுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது அதிகாரப்பூர்வ நாணய மாற்று தொகைகளை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடுமையான வர்த்தக முரண்பாட்டு நிலைமை நீடித்து வரும் பின்னணியில் இந்திய அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



