இலங்கையால் ஆபத்தாகும் இந்திய இராணுவத்தளங்கள் (Video)
இந்தியாவின் தென்பகுதி நடவடிக்கைகளை நோட்டமிடும் சீனாவினுடைய தளமாக இலங்கை அமைந்திருப்பதாக அமெரிக்கா பசாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பிலும், அதன் தாக்கம் இந்தியாவிற்கு எவ்வாறான பாதிப்புகளை உண்டாக்கும் என்பது குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
''இலங்கைக்குள் நுழையும் சீன கப்பல்கள் அனைத்தும் ஆய்வு கப்பல்கள் என கூறப்பட்ட போதும், அவை இராணுவ உளவு உபகரணங்களை கொண்டிருக்கும்.
இந்த விடயம் இந்தியாவிற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். இதன் காரணமாகவே இந்தியாவானது சீன கப்பல் விவகாரத்தில் தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகிறது.'' என தெரிவித்துள்ளார்.
சீனாவின் நகர்வுகளும், இந்தியாவின் இலங்கை மீதான அழுத்தங்களும் தொடர்ந்தும் அதிகரிக்கும் வேளையில் இலங்கை அவற்றை கடந்து தனது அரசியல் திட்டங்களை எவ்வாறு வகுக்கின்றது என்பது குறித்து முழுமையாக அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...