யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்தியா உதவி(Photo)
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்கியுள்ளது.
தற்போது நாட்டில் மருந்து பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடினை கருத்தில்கொண்டு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
உதவி வழங்கும் நிகழ்வு

இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்து பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரிடம் நேரடியாக வழங்கி வைத்துள்ளார்.
மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்திய துணைத் தூதரகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் இந்திய
துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri