வங்காள விரிகுடா வான் பகுதி தொடர்பில் இந்தியா விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வங்காள விரிகுடா வான் பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை விமானப்பரப்புக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் இந்த அறிவிப்பு வங்காள விரிகுடா பகுதியில் ஏவுகணைச் சோதனைகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3 முதல் 4 வரை ஏவுகணை சோதனை நடத்தப்படவுள்ள நிலையில் குறைந்தது நான்கு சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியப் பெருங்கடல்
ஷியாங் ஜங் ஹொங் - 01 (Xiang Yang Hong 01), ஷியாங் ஜங் ஹொங் - 03 (Xiang Yang Hong 03), யுவான் வாங் 03, ஏவுகணை கண்காணிப்பு கப்பல் மற்றும் டா யாங் ஹாவ் என்பனவே குறித்த கப்பல்களாகும்
இதனையடுத்து சீனாவின் உளவுக் கப்பல்களுக்கு அருகில் 'ஆர்வி சமுத்திர ரத்னாகர்' என்ற ஆராய்ச்சிக் கப்பலை இந்தியா நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் அனைத்தும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன் சீனாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஒரு மூலோபாய நடவடிக்கையில் இந்தியா ஒரே நேரத்தில் 11 நீர்மூழ்கிக் கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.
இந்தியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதற்காக, சீனா நான்கு உளவுக் கப்பல்களை இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பியதாக வெளியான செய்திகளுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை
தற்போது, இந்திய கடற்படை 16 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குகிறது, இதில் ஐந்து ஸ்கோர்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், நான்கு HDW நீர்மூழ்கிக் கப்பல்களாகும்
இதற்கிடையில் இலங்கை அண்மையில் ஜேர்மன் ஆராய்ச்சிக் கப்பல் கொழும்G துறைமுகம் வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், ஷியாங் ஜங் ஹொங் - 03 என்ற ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கான பீஜிங்கின் கோரிக்கையை இலங்கை நிராகரித்ததை அடுத்து, இந்த புதிய நடவடிக்கை சீனாவின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது
ஆராய்ச்சிக் கப்பல்கள் மீதான தடையை இலங்கை நீக்கிய பின்னர் சீனக் கப்பல்கள்
கொழும்பில் துறைமுக அழைப்பை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |