இந்தியாவால் இலங்கையில் அணுசக்தி மின்சாரம்
இந்தியா அணுசக்தி வலு அபிவித்திக்கு இலங்கையுடன் ஒத்துழைக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்க இன்னும் தயாராக இல்லை என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரஷ்யாவும் பல ஆண்டுகளாக அணுசக்தித் திட்டங்களில் முதலீடு செய்ய இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.
ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகாரியன் சமீபத்தில் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியைச் சந்தித்து, இலங்கை அணுசக்தி ஆணையத்தின் (SLAEA) பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
அணுசக்தித் திட்டத்திற்காக எந்தவொரு தரப்பினருடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்ற எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கை இன்னும் தயாராக இல்லை என்று அமைச்சர் தூதுக்குழுவிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை அணுசக்தி ஆணையம் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



