யாழில் தேசியக் கொடியுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதை வரவேற்கிறேன்: சரத் வீரசேகர
யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடி ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04.02.2024) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களும் சுதந்திர தினமும்
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.
அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.
சுதந்திரமாக சுதந்திர தின கொண்டாட்டம்
நான் நினைக்கின்றேன் இன்று தான் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும் என்று. அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன்.
அதுதான் உண்மையான நல்லிணக்கம். வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர
தினத்தை கொண்டாடியதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |