இலங்கைக்கு சுதந்திர தினம்..! ஆனால் வடக்கு - கிழக்கில் கறுப்பு தினம்

Independence Day Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Parthiban Jan 29, 2024 05:52 PM GMT
Report

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 'கறுப்பு தினம்' ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெப்ரவரி 4ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

மேலும், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

மீண்டும் கூட்டமைப்பை இணைக்கும் தீவிர முயற்சியில் சிறீதரன்

மீண்டும் கூட்டமைப்பை இணைக்கும் தீவிர முயற்சியில் சிறீதரன்

அரசியல் தீர்வு

தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுவதோடு இருப்பும் கேள்விக்குரியாகியுள்ளதால் அவர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுகளும் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

இலங்கைக்கு சுதந்திர தினம்..! ஆனால் வடக்கு - கிழக்கில் கறுப்பு தினம் | Independence Day As A Black Day In North And East

அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. ஆகவே, சுதந்திர தினத்தை வடக்கு - கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம். அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

காணாமல் போன உறவுகள்

அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன.

ஆகவே, தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.”

இலங்கைக்கு சுதந்திர தினம்..! ஆனால் வடக்கு - கிழக்கில் கறுப்பு தினம் | Independence Day As A Black Day In North And East  

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

எத்தனை ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும் 14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எனினும், எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை.

சர்வதேச நீதி

இதுவரை, 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம்.

பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை.

இலங்கைக்கு சுதந்திர தினம்..! ஆனால் வடக்கு - கிழக்கில் கறுப்பு தினம் | Independence Day As A Black Day In North And East

ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்” என கூறியுள்ளார்.

இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து

இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து

சாந்தனின் நிலைமையால் தமிழர் மத்தியில் அதிருப்தி: விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

சாந்தனின் நிலைமையால் தமிழர் மத்தியில் அதிருப்தி: விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US