T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி! வெற்றிக்கிண்ணத்தோடு மைதானத்திற்குள் வந்த தோனி
ஐசிசி டி 20 உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் இன்றைய இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிக்கொண்டது.
இலங்கையை கடந்து செல்லும் 60 ஆயிரம் கப்பல்கள் : போர் நீடித்தால் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து
இன்று இறுதிப் போட்டி
இந்தநிலையில், இந்தியா இதற்கு முன்னர் மூன்று முறை டி20 இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று இரண்டு முறை வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
அதேசமயம், நியூஸிலாந்து அணி 2021ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றதோடு, அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதன்படி, இன்றையதினம் இடம்பெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இந்திய அணியின் வெற்றிகள் குறித்து ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
மேலும், இன்றைய இறுதிப் போட்டிகள் ஆரம்பமானபோது, டி 20 உலகக் கிண்ணத்தை இருமுறை இந்தியாவின் வெற்றிக்கிண்ணமாக மாற்றிய முன்னாள் அணித்தலைவர்களான ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர், உலகக் கிண்ணக் கோப்பையோடு மைதானத்திற்குள் நுழைந்ததோடு, இதனைப் பார்த்த ரசிகர்கள் வெகுவாக ஆர்ப்பரித்தனர்.




