முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
புதிய இணைப்பு
சர்வதேச டி20 உலக கிண்ண தொடரின், முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் இந்திய அணி 8 விக்கடுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணியானது, சிறப்பான பந்துவீச்சின் மூலம் அயர்லாந்து அணியை 96 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.
இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 விக்கட் இழப்புக்கு வெற்றியிலக்கை கடந்துள்ளது.
இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 37 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
மேலும் அயர்லாந்து அணி சார்பாக பந்துவீச்சில் மார்க் அதேர் மற்றும், பெஞ்சமின் வைட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
முதலாம் இணைப்பு
நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரில் அணி வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் பொறுப்பினை விராட் கோஹ்லி (Virat Kohli) எடுத்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கெதிரான இன்றைய (05.06.2024) போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.
தொடர்ந்து, போட்டி தொடங்கும் முன் அணியின் வீரர்களுடன் விராட் கோஹ்லி உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றினார். வழக்கமாக இந்த பொறுப்பை ஒரு அணியின் தலைவரே மேற்கொள்வார்.
சிறப்பாக செயற்பட்ட பந்துவீச்சாளர்கள்
ஆனால், இம்முறை இந்த பொறுப்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோஹ்லிக்கு வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட, அயர்லாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும் ஹர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுக்களையும் பும்ராஹ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |