இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 5 நாள் ஆட்டம் இன்று
சுற்றுலா இந்திய(India) அணிக்கும் இங்கிலாந்து(England) அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின்போது இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் விக்கட் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டம்
இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு 371 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி அந்த அணி இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

முன்னதாக இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 471 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 465 ஓட்;டங்களையும் பெற்றன.

இதனையடுத்து இந்திய அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களை பெற்றது இதில் கே.எல் ராகுல் 137 ஓட்டங்களையும், ரிசப் பண்ட் 118ஓட்டங்களையும் பெற்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan