இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.
3ஆவது நாள் ஆட்டம்
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிஷப் பண்ட்
இந்நிலையில் 60 ஓவர்களுக்கு பிறகு பந்தை மாற்ற வேண்டிய சூழல் வந்தது.
Rishabh Pant was clearly unhappy by that decision of the umpire of not changing the ball. #INDvsENG pic.twitter.com/d9c1qdZPbD
— Mamta Jaipal (@ImMD45) June 22, 2025
அதனால் இந்திய வீரர்கள் பும்ரா, கில், ரிஷப் பண்ட், சிராஜ் ஆகியோர் பந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதனை சோதித்து பார்த்த நடுவர்கள் பந்து சரியாக உள்ளதாக தெரிவித்து வேறு பந்தை அனுமதிக்கவில்லை.
மற்ற வீரர்களை விட ரிஷப் பண்ட் கேட்டபோது நடுவர் முடியாது என்றதால், கோபமடைந்த பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
