19 வயதுக்கான தொடரில் இந்தியாவை வென்று கிண்ணத்தை சுவீகரித்த பங்களாதேஸ்
துபாயில் (Dubai) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஸ் (Bangladesh) அணி, வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இன்று (08) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய (India) அணியை 59 ஓட்டங்களால் தோற்கடித்ததன் மூலம் இந்த வெற்றியை பங்களாதேஸ் அணி பதிவு செய்துள்ளது.
மொத்த ஓட்டங்கள்
இன்றைய இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 49.1 ஓவர்களில் 198 ஓட்டங்களை பெற்றது.

எனினும், பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்தநிலையில், இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரர் என்ற இரண்டு விருதுகளையும் பங்களாதேஸின் இக்பால் ஹொசைன் எமொன் பெற்றுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri