மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கில் நிலைநிறுத்துவதற்காக 3ஆவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.இந்தக் கப்பல் இம்மாத இறுதிக்குள் மத்திய கிழக்கை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் பிரசன்னம்
ஏற்கனவே ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வொஷிங்டன்’ ஆகிய இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மத்திய கிழக்கில் கூடுதலாக சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்களை நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 ஆக அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.