திருகோணமலையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்
திருகோணமலையின் மொரவெவ பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மொரவெவ- மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் சில்லறை கடைகள் இரண்டு உடைக்கப்பட்டு அங்கிருந்து பணம், பிஸ்கட், சிகரெட் மற்றும் ஏனைய முக்கிய பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
மேலும் குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவின் முக்கிய பாகங்கள் மற்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டி என்பன உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan