வவுனியாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை : பொலிஸார் அசமந்தப்போக்கு
வவுனியாவில் (Vavuniya) மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
எனினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி இருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கை
வவுனியா பூந்தோட்டம் வீதியில் தென்னந்தோட்டத்தடி மற்றும் பூந்தோட்டம் சாந்தி, கற்குழி, தேக்கவத்தை உட்பட வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் குறித்த பகுதிகளில் இளைஞர் குழுக்கள் அதிகளவில் கூடி நின்று குறித்த போதை பாக்கினை கொள்வனவு செய்து உண்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்நிலையில், 107 என்கின்ற போதை ஒழிப்பு தொடர்பான யுக்திய நடவடிக்கைக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் இவ்வாறான விடயங்களை கண்டும் காணாது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |