கோவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து! இருவர் மரணம்
கோவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஒரு வார காலமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இருவர் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் கித்துல்வத்த(Nalin Kithulwatta) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
தற்போது கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 78 சிகிச்சை பெற்றுள்ளதோடு , 150 க்கும் நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பல அறைகளில் இந்த நோயாளர்கள் உள்ளனர். கொழும்பில் மாத்திரமின்றி நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளிலும் இந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 5 நாட்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இதுவே இந்நோயின் அபாய நிலைமை ஆகும்.
எனினும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாவிட்டால் நோயாளர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணல் என்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.
கோவிட் வைரசுக்கு எதிராக எமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி , எமது உடற்பாகங்களுக்கு எதிராகவே செயற்படும் நிலைமை ஏற்படுகின்றமையே நோய் நிலைமை தீவிரமடையக் காரணமாகும்.
அதற்கமைய இதய தொகுதிக்கு எதிராக செயற்படும் போது , இதயத்திற்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படக் கூடும். கடந்த 5 நாட்களில் இரு சிறார்கள் உயிரிழந்தமைக்கு இதுவே காரணமாகும். எனவே இந்நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam