இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் தொற்றா நோய்களைத் தடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டாரவின் ஆலோசனையின் பிரகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொடவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தொற்றா நோய்களை தடுக்க வேலைத்திட்டம்
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கலந்துகொண்ட பணிப்பாளர், இலங்கையில் தொற்றா நோய்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இலங்கையில் 80% மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை சமாளிக்க பலதரப்பு தலையீடு தேவை என்றும், அதற்கேற்ப இந்த குழு கூடி தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
